

ஸ்ரீநகர்
இந்த வெற்றியில் குறிப்பிடத்தக்கது எவ்வித மார்த்தட்டலும், ஓசைகளும் இன்றி அது சாதிக்கப்பட்டதுதான் என்று தனது டிவீட்டர் பதிவில் ஓமர் கூறியுள்ளார். மோதலுக்கு முன்பிருந்த நிலையை ஏற்படுத்தியுள்ளது மோடிக்கும், இந்தியாவிற்கும் வெற்றி என்று அவர் குறிப்பிட்டுள்ளார். சீனா களத்தை தனது சாலை அமைக்கும் திட்டத்தின் மூலம் மாற்றப் பார்த்தது என்று அவர் கூறினார்.
ஃபாரூக் அப்துல்லாவின் சூளுரை
காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்தை காப்பதற்காக தனது உயிரையும் இழக்கத் தயார் என்று முன்னாள் முதல்வர் ஃபாரூக் அப்துல்லா கூறினார். சட்டப் பிரிவு 35-ஏவின் படி மாநிலத்தின் நிலத்தையும், ஆட்சியையும் பிற இந்திய மாநிலத்தவர் பெற இயலாது. இச்சட்டத்தைக் காப்பாற்றுவதற்கு தற்போது ஆட்சியிலிருக்கும் மக்கள் ஜனநாயக கட்சி - பாஜக அரசு உச்சநீதிமன்றத்தில் சரிவர வாதாடவில்லை என்று அவர் கட்சியினரிடையே உரையாற்றும் போது கூறினார். இதை நாம் ஒருபோதும் நிகழ விடமாட்டோம் என்று அவர் சூளுரைத்தார்.
ஜிஎஸ்டியின் தீமைகள் மக்களுக்கு இப்போது தெரிய வருவது போல மக்களுக்கு இந்த விஷயத்தினால் ஏற்படும் பாதகங்களை மக்களிடையே நாம் கொண்டு செல்ல வேண்டும் என்றார் ஃபாரூக். காஷ்மீர் பிரச்சினை தீராத வரையில் பாகிஸ்தான் - இந்தியா இடையேயான உயிர்பலிகளை தடுக்க இயலாது என்றும் இதனால் காஷ்மீரிகளே அதிகம் பேர் பலியாகின்றனர் என்றார் ஃபாரூக். இப்பிரச்சினையை இந்தியாவும், பாகிஸ்தானும் தீர்த்துக்கொண்டால்தான் காஷ்மீர் மக்கள் அமைதியாக வாழ முடியும் என்றார் அவர்.