தினகரன் உள்ளிட்ட 9 பேர் மீது துணை குற்றப்பத்திரிகை டெல்லி கோர்ட்டில் தாக்கல்

தேர்தல் கமி‌ஷனுக்கு லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் தினகரன் உள்ளிட்ட 9 பேர் மீது துணை குற்றப்பத்திரிகை டெல்லி கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டது.
தினகரன் உள்ளிட்ட 9 பேர் மீது துணை குற்றப்பத்திரிகை டெல்லி கோர்ட்டில் தாக்கல்
Published on

புதுடெல்லி,

இரட்டை இலை சின்னத்தை பெறுவதற்காக தேர்தல் கமிஷனுக்கு ரூ.50 கோடி லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் டெல்லி தனிக்கோர்ட்டில் கடந்த ஜூலை 14ந் தேதி சுகேஷ் சந்திரசேகர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. நேற்று முன்தினம் தனிக்கோர்ட்டு நீதிபதி பூனம் சவுத்ரி முன்பு தாக்கல் செய்யப்பட்ட கூடுதல் குற்றப்பத்திரிகையில் டி.டி.வி.தினகரன், மல்லிகார்ஜூனா, சுகேஷ் சந்திரசேகர், ஹவாலா ஏஜெண்டுகள் புல்கித் குந்த்ரா, ஜெய்விக்ரம் ஹரன் ஆகியோரின் பெயர்கள் இடம்பெற்று இருந்தன.

இந்த நிலையில், இந்த வழக்கில் நேற்று நீதிபதி கிரண் பன்சால் முன்னிலையில் டெல்லி குற்றப்பிரிவு போலீசார் துணை குற்றப்பத்திரிகை ஒன்றை தாக்கல் செய்தனர். 272 பக்கங்களை கொண்ட இந்த துணை குற்றப்பத்திரிகையில் டி.டி.வி.தினகரன், மல்லிகார்ஜூனா, சுகேஷ் சந்திரசேகர், நத்துசிங், புல்கித் குந்த்ரா, பி.குமார், லலித்குமார், ஜெய்விக்ரம் ஹரன், நரேந்திர ஜெயின் ஆகிய 9 பேரின் பெயர்கள் இடம்பெற்று உள்ளன. குற்றப்பத்திரிகையில் டி.டி.வி.தினகரன் மீது இந்திய தண்டனை சட்ட பிரிவுகள் 120பி (கிரிமினல் சதி), 201 (சாட்சியங்களை அழித்தல்) மற்றும் ஊழல் தடுப்பு சட்ட பிரிவின் கீழ் குற்றம்சாட்டப்பட்டு இருக்கிறது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com