கார்கிலில் வீரர்களுடன் கலந்துரையாடியது மறக்க முடியாதது: பிரதமர் மோடி

கார்கிலில் வீரர்களுடன் கலந்துரையாடியது மறக்க முடியாதது என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
கார்கிலில் வீரர்களுடன் கலந்துரையாடியது மறக்க முடியாதது: பிரதமர் மோடி
Published on

புதுடெல்லி,

காஷ்மீர் எல்லையில் உள்ள கார்கில் பகுதியை, கடந்த 1999ஆம் ஆண்டு பாகிஸ்தான் படையினர் ஆக்கிரமித்தனர். அப்போது பாகிஸ்தான் துருப்புகள் மீது இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தி, விரட்டியடித்தது. இந்த போரின்போது வீரமரணம் அடைந்த இந்திய ராணுவ வீரர்களின் தியாகத்தை நினைவுகூரும் வகையில், ஆண்டுதோறும் ஜூலை 26ஆம் தேதி கார்கில் போர் வெற்றி தினம் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.

கார்கில் போர் நினைவு தினத்தை முன்னிட்டு பிரதமர் மோடி, கார்கில் போரின் போது, ராணுவ வீரர்களை சந்தித்தை புகைப்படத்தை வெளியிட்டு பிரதமர் மோடி நினைவு கூர்ந்துள்ளார்.

பிரதமர் மோடி வெளியிட்டுள்ள டுவிட் பதிவில், 1999 -ஆம் ஆண்டு கார்கில் போரின் போது, கார்கில் சென்று நமது துணிச்சல் மிக்க வீரர்களை சந்தித்து ஒற்றுமையை காட்ட எனக்கு வாய்ப்பு கிடைத்தது.

அந்த சமயத்தில், நான் ஜம்மு காஷ்மீர் மற்றும் இமாச்சல பிரதேச மாநிலங்களில் கட்சிப்பணியில் ஈடுபட்டு இருந்தேன். கார்கில் சென்றதும், நமது வீரர்களுடன் கலந்துரையாடியதும் மறக்க முடியாதவை என்று தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com