திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஒரு நாள் உண்டியல் காணிக்கை ரூ.4.38 கோடி

35 ஆயிரத்து 941 பக்தர்கள் தலைமுடி காணிக்கை செலுத்தினர்.
திருப்பதி ஏழுமலையான் கோவில்
Published on

திருமலை,

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தினமும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

இந்த நிலையில், திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நேற்று முன்தினம் 83 ஆயிரத்து 858 பக்தர்கள் தரிசனம் செய்தனர். அவர்களில் 35 ஆயிரத்து 941 பக்தர்கள் தலைமுடி காணிக்கை செலுத்தினர். உண்டியல் காணிக்கையாக ரூ.4 கோடியே 38 லட்சத்தை பக்தர்கள் செலுத்தியிருந்தனர்.

திருப்பதி தேவஸ்தானம்

அன்றைய தினம் 4 லட்சம் லட்டுகள் விற்பனை செய்யப்பட்டன. 2 லட்சத்து 17 ஆயிரம் பக்தர்களுக்கு அன்னபிரசாதம் வழங்கப்பட்டது. மேலும், 3 ஆயிரத்து 331 பக்தர்களுக்கு மருத்துவ சிகிச்சை வழங்கப்பட்டதாகவும் தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்தனர்.

தற்போது, 22 காத்திருப்பு அறைகள் நிரம்பியுள்ளதாகவும் எஸ்.எஸ்.டி.டோக்கன் இல்லாத சர்வதரிசனத்திற்கு சுமார் 12 மணி நேரம் ஆவதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com