டெல்லியில் காளை மாடு முட்டி ஒருவர் பலி - மக்கள் அச்சம்

டெல்லியில் காளை மாடு முட்டியதில் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

புதுடெல்லி,

டெல்லி அலிப்பூர் பகுதியை சேர்ந்தவர் அசோக் குமார் (67). இவர் நேரு என்க்ளேவில் உள்ள ஒரு கிடங்கில் பாதுகாப்புப் பணியாளராகப் பணியாற்றி வந்தார். அப்போது தனது இரவு பணியை முடித்துவிட்டு காலை வீட்டிற்கு திரும்பினார்.

காலை 6 மணியளவில் அலிப்பூர்-புத்பூர் சாலைக்கு அருகே அசோச் குமார் சென்றுகொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த காளை மாடு ஒன்று சற்றும் எதிர்பாராத நிலையில் அசோக் குமாரை கொடூரமாக முட்டித்தாக்கியது. இதில் நிலைத்தடுமாறி கீழே விழுந்த அசோக் குமார் பரிதாபமாக உயிரிழந்தார்.

பின்னர் அவரை தாக்கிய காளை அங்கு வந்த மற்றொரு நபரான ராம் லக்கான் (60) என்பவரையும் தாக்கியது. இதில் எந்தவித பாதிப்பும் இல்லாமல் ராம் லக்கான் சிறிய காயங்களுடன் உயிர் தப்பினார்

இந்த விபத்து குறித்து தகவலறிந்த அலிப்பூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். அங்கு இறந்து கிடந்த அசோக் குமாரின் உடலை மீட்ட போலீசார் அருகில் உள்ள மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பிவைத்தனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com