ஒரே நாடு ஒரே தேர்தல்; நாட்டின் வளர்ச்சியை ஊக்குவிக்கும் - சிராக் பஸ்வான்

'ஒரே நாடு ஒரே தேர்தல்' திட்டம் நாட்டின் வளர்ச்சியை ஊக்குவிக்கும் என சிராக் பஸ்வான் தெரிவித்துள்ளார்.
ஒரே நாடு ஒரே தேர்தல்; நாட்டின் வளர்ச்சியை ஊக்குவிக்கும் - சிராக் பஸ்வான்
Published on

புதுடெல்லி,

ஒரே நாடு, ஒரே தேர்தல் மசோதாவை நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்த மத்திய மந்திரிசபை ஒப்புதல் அளித்துள்ளது. இதற்கு பா.ஜ.க.வின் கூட்டணி கட்சியான லோக் ஜன்சக்தி கட்சியின் தலைவரும், மத்திய மந்திரியுமான சிராக் பஸ்வான் வரவேற்பு தெரிவித்துள்ளார்.

'ஒரே நாடு ஒரே தேர்தல்' திட்டம் தேசிய நலன் சார்ந்தது என்றும், இது நாட்டின் வளர்ச்சியை ஊக்குவிக்கும் என்றும் அவர் கூறியுள்ளார். அடிக்கடி தேர்தல் நடத்தப்படுவது நாட்டின் வளர்ச்சிக்கு தடையாக இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார். மேலும் தனது தந்தை ராம் விலாஸ் பஸ்வானின் காலத்தில் இருந்தே லோக் ஜன்சக்தி கட்சி 'ஒரே நாடு ஒரே தேர்தல்' திட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து வருவதாக சிராக் பஸ்வான் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com