டெல்லியில் சலுகை விலையில் வெங்காயம் விற்பனை

டெல்லியில் சலுகை விலையில் வெங்காயம் விற்பனை செய்யப்படுகிறது.
டெல்லியில் சலுகை விலையில் வெங்காயம் விற்பனை
Published on

புதுடெல்லி,

நாடு முழுவதும் வெங்காயம் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. இந்த விலையேற்றத்தால் பொதுமக்கள் மிகவும் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

இந்த நிலையில், டெல்லியில் செயல்படும் மத்திய அரசின் தேசிய கூட்டுறவு நுகர்வோர் இயக்கம் சார்பில் பொதுமக்களுக்கு ஒரு கிலோ வெங்காயம் 22 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. முக்கியமான சந்திப்புகளில் மினிலாரிகளில் வெங்காயத்தை கொண்டு வந்து விற்பனை செய்கிறார்கள். சலுகை விலையில் நபர் ஒருவருக்கு 2 கிலோ வெங்காயம் மட்டுமே கிடைக்கும். இதை பெற அடையாள அட்டையை காண்பிக்க வேண்டும். இதுபோல டெல்லியில் உள்ள மதர் டெய்ரி பாலகங்களிலும் சலுகை விலையில் வெங்காயம் விற்பனை செய்யப்படுகிறது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com