நீட் விவகாரம்: 'சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பால் உண்மை வென்றது' - மத்திய மந்திரி தர்மேந்திர பிரதான்

நீட் மறுதேர்வு நடத்தக்கோரிய அத்தனை மனுக்களையும் சுப்ரீம் கோர்ட்டு தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

புதுடெல்லி,

இளங்கலை மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வில் வினாத்தாள் கசிவு தொடர்பாக முறைகேடுகள் நடந்ததாக சர்ச்சை எழுந்தது. இந்த விவகாரத்தில் பாதிக்கப்பட்ட மாணவர்கள் தொடர்பாக மறுதேர்வு நடத்தக்கோரி வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு விசாரணையில், மறுதேர்வு நடத்தக்கோரிய அத்தனை மனுக்களையும் சுப்ரீம் கோர்ட்டு தள்ளுபடி செய்து உத்தரவிட்டதுடன், இந்த கல்வி ஆண்டில் நடந்து முடிந்த நீட் தேர்வை ரத்து செய்ய முடியாது என்று கூறியது.

இது தொடர்பாக கருத்து தெரிவித்த மத்திய கல்வி மந்திரி தர்மேந்திர பிரதான், 'நீட் தேர்வு விவகாரத்தைப் பயன்படுத்தி எதிர்க்கட்சிகள் அராஜகம் மற்றும் நாட்டில் அமைதியின்மையை உருவாக்க முயன்றதாக அவர் குற்றம் சாட்டினார். மேலும் சுப்ரீம் கோட்டு தீர்ப்பின் மூலமாக உண்மை வென்றுள்ளது. தேர்வின் புனிதத்தன்மை மீறப்பட்டதாக கூறுவதற்கு எந்த ஆதாரமும் இல்லை என்பது தெளிவாகியுள்ளது.

இந்த விவகாரத்தில் மாணவர்கள் மற்றும் அவர்களின் பெற்றோர்களை தவறாக வழிநடத்தியதற்காக எதிர்க்கட்சிகள் மன்னிப்பு கேட்க வேண்டும், கோர்ட்டு உத்தரவின் படி நீட் இளங்கலை தேர்வுக்கான இறுதி முடிவுகள் 2 நாட்களுக்குள் அறிவிக்கப்படும்' என்று அவர் தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com