மாநிலங்களுக்கு 111 கோடி கொரோனா தடுப்பூசி வினியோகம்

மாநிலங்களுக்கும், யூனியன் பிரதேசங்களுக்கும் 111 கோடி கொரோனா தடுப்பூசி வினியோகம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

புதுடெல்லி,

இந்தியாவில் 100 கோடி டோஸ்களை தாண்டி கொரோனா தடுப்பூசி திட்டம் சென்று கொண்டிருக்கிறது. அந்த வகையில் பொதுமக்களுக்கு போடுவதற்காக மத்திய அரசு இதுவரையில் மாநிலங்களுக்கும், யூனியன் பிரதேசங்களுக்கும் 111 கோடியே 13 லட்சம் தடுப்பூசிகளை வினியோகம் செய்துள்ளது.

இவற்றில் பயனாளிகளுக்கு செலுத்தியதுபோக, மாநிலங்களிடமும், யூனியன் பிரதேசங்களிடமும் 12 கோடியே 73 லட்சத்து 62 ஆயிரத்து 6 டோஸ் தடுப்பூசிகள் கையிருப்பில் உள்ளன என்று மத்திய சுகாதார அமைச்சகம் நேற்று வெளியிட்டது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com