

புதுடெல்லி,
கொரோனாவில் இருந்து மக்களை பாதுகாக்க தடுப்பூசி போடும் பணிகளை மத்திய-மாநில அரசுகள் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றன. இதற்காக உற்பத்தியாளர்களிடம் இருந்து தடுப்பூசியை மத்திய அரசே கொள்முதல் செய்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு இலவசமாக வழங்கி வருகிறது.
அந்தவகையில் இதுவரை 63.09 கோடி தடுப்பூசி வழங்கப்பட்டு இருப்பதாக மத்திய சுகாதார அமைச்சகம் கூறியுள்ளது. இதில் நேற்றைய நிலவரப்படி 4.87 கோடி (4,87,39,946) தடுப்பூசிகள் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களிடம் கையிருப்பில் உள்ளதாகவும் அமைச்சகம் கூறியுள்ளது.
இன்னும் 21.76 லட்சம் (21,76,930) தடுப்பூசி டோஸ்கள் விரைவில் வழங்கப்படும் எனவும் அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டு உள்ளது.