எல்லையில் பாகிஸ்தான் அத்துமீறல்- இந்திய ராணுவம் தக்க பதிலடி

எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல் நடத்தியது.
எல்லையில் பாகிஸ்தான் அத்துமீறல்- இந்திய ராணுவம் தக்க பதிலடி
Published on

ஸ்ரீநகர்,

போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி எல்லையில் தாக்குதல் நடத்துவதை பாகிஸ்தான் ராணுவம் வாடிக்கையாகக் கொண்டுள்ளது. பாகிஸ்தானின் ராணுவத்தின் இத்தகைய அத்துமீறல்களுக்கு இந்திய ராணுவம் தக்க பதிலடி கொடுக்கத் தயங்குவதில்லை. எனினும், பாகிஸ்தான் தொடர்ந்து அத்துமீறலிலேயே ஈடுபட்டு வருகிறது.

அந்த வகையில், ஜம்முகாஷ்மீரின் சுந்தர்பனி மற்றும் கிருஷ்னகாதி செக்டார்களில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல் நடத்தியது. பாகிஸ்தானின் இந்த அத்துமீறலுக்கு இந்திய ராணுவமும் பதிலடி கொடுத்தது. நடப்பு மாதத்தில் மட்டும் பாகிஸ்தான் 47 முறை அத்துமீறி தாக்குதல் நடத்தியுள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com