

ஸ்ரீநகர்,
ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசத்தின் பூஞ்ச் மாவட்டம் குல்பூர் பகுதியில் உள்ள சர்வதேச எல்லையில் நேற்று இரவு எல்லைப்பாதுகாப்புப்படையினர் வழக்கமான பாதுகாப்புப்பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது, பாகிஸ்தானில் இருந்து இளைஞர் இந்திய எல்லைக்குள் நுழைய முயன்றார். இதையடுத்து, விரைந்து செயல்பட்ட பாதுகாப்புப்படையினர் பாகிஸ்தான் இளைஞரை கைது செய்து அவரிடம் விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணயில் அந்த இளைஞர் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரின் போலஸ் கிராமத்தை சேர்ந்த முகமது சஜத் (வயது 26) என்பதும் அவர் தவறுதலாக இந்திய எல்லைக்குள் நுழைந்ததும் தெரியவந்துள்ளது. இதையடுத்து, பாகிஸ்தான் இளைஞர் முகமது சஜதிடம் பாதுகாப்புப்படையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.