இந்தியாவின் எல்லை பகுதியில் நிறுத்த பாகிஸ்தான் 600 போர் டாங்கிகளை வாங்க உள்ளது

இந்தியாவின் எல்லை பகுதியில் பாகிஸ்தான் போர்திறனை அதிகரிக்க 600 போர் டாங்கிகளை கொள்முதல் செய்ய உள்ளது.
இந்தியாவின் எல்லை பகுதியில் நிறுத்த பாகிஸ்தான் 600 போர் டாங்கிகளை வாங்க உள்ளது
Published on

புதுடெல்லி,

பாகிஸ்தான் இராணுவத்தின் கவச உடையில் நவீனமயமாக்கல் ஒரு "நத்தை வேகத்தில்" நகர்ந்து வந்தாலும் , 600 நவீன போர் டாங்கிகளை வாங்க பாகிஸ்தான் ஒரு மெகா திட்டத்தை தற்போது உருவாக்கியுள்ளது.

ஜம்மு மற்றும் காஷ்மீரில் எல்லை கட்டுப்பாட்டு கோடு அருகே தனது போர்த்திறனை உயர்த்துவதற்காக ரஷ்யாவில் இருந்து டி -90 டாங்கிகள் உள்பட நவீன முக்கியமான ஆயுதங்களை வாங்க உள்ளது என உளவுத்துறை வட்டாரங்கள் தெரிவித்து உள்ளன.

அதிகமாக துல்லியமாக தாக்கும் கம்ப்யூட்டரைஸ்டு செய்யப்பட்ட மற்றும் ஃபயர் கண்ட்ரோல் சிஸ்டம் போன்ற அம்சங்களைக் கொண்டுள்ள டாங்கிகளை வாங்க பாகிஸ்தான் திட்டமிட்டு உள்ளது. இதனால் மேலும் 3 முதல் 4 கிமீ வரையிலான இலக்குகளை அவர்களால் தாக்க முடியும்.

சில டாங்கிகள் எல்லை கட்டுப்பாட்டு கோடு அருகே நிறுத்தப்படும். இவை போர்க்கள செயல்திறனுக்கான பரந்த அம்சங்களைக் கொண்டிருக்கும்.

போர் டாங்கிகள் தவிர இத்தாலியில் இருந்து 150 மிமீ எஸ்பி மிக் 10 ரக 245 துப்பாக்கிகளையும் பாகிஸ்தான் வாங்குகிறது. ஏற்கனவே பாகிஸ்தான் இது போன்ற 120 துப்பாக்கிகளை பெற்று உள்ளது.

பாகிஸ்தான் கடந்த இரு ஆண்டுகளாக ரஷ்யாவுடன் கூட்டு இராணுவ பயிற்சிகளை நடத்தி வருகிறது, மேலும் ரஷ்யாவிடம் இருந்து பாகிஸ்தான் ஆயுதங்கள் வாங்குவது பற்றி இந்தியா கவலை கொண்டுள்ளது.

உலகின் முன்னணி உலகளாவிய உற்பத்தியாளர்களிடமிருந்து குறைந்தபட்சம் 360 போர் டாங்கிகளை வாங்குவதற்கு பாகிஸ்தான் முடிவு செய்துள்ளது. சீனாவின் உதவியைக் கொண்டு 220 டாங்கிகளை உள்நாட்டில் தயாரிக்கவும் முடிவு செய்துள்ளது.

ஜம்மு மற்றும் காஷ்மீரில் எல்லை கட்டுப்பாட்டு கோடு அருகே போர் டாங்கிகளை அதிகரிக்க பாகிஸ்தான் ராணுவம் நடவடிக்கை எடுத்து வருகிறது. குறிப்பாக கடந்த ஒரு வருடமாக பாகிஸ்தானின் ஒவ்வொரு ஊடுருவலுக்கும் துப்பாக்கி சூடுக்கும் இந்திய இராணுவம் பலமாக பதிலடி கொடுத்து வருகிறது.

இந்திய எல்லை கட்டுப்பாட்டு கோடு பகுதியில் நவ்காம் பிரிவில் பாகிஸ்தானிய எல்லை அதிரடி படையினர் தாக்குதல் நடத்தும் நோக்குடன் ஊருடுவ முயன்றுள்ளனர்.

அவர்கள் அடர்ந்த காட்டு பகுதி வழியே உயர்ரக துப்பாக்கிகள் போன்ற ஆயுதங்களுடன் பாகிஸ்தான் எல்லையில் இருந்து இந்திய எல்லைக்குள் வர முயன்றனர். அவர்கள் பாகிஸ்தானில் இருந்து வழக்கம்போல் வருபவர்கள் போன்று ஆடையணிந்து இருந்தனர். அவர்கள் கொண்டு வந்த பொருட்களில் அந்நாட்டின் அடையாளங்கள் இருந்தன.

சிலர் எல்லை பாதுகாப்பு படையினர் போன்றும் மற்றும் உளவு அமைப்பினர் போன்றும் உடை அணிந்திருந்தனர். இந்நிலையில், அவர்கள் மீது இந்திய ராணுவத்தினர் தாக்குதல் நடத்தி சுட்டு கொன்றனர்.

இதனால் இந்திய எல்லையில் தாக்குதலுக்காக ஆயுதங்களுடன் வந்த பாகிஸ்தானிய எல்லை அதிரடி படையினரின் ஊடுருவல் முயற்சி முறியடிக்கப்பட்டது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com