காஷ்மீர் இளைஞர்களை பயங்கரவாதம் நோக்கி இழுக்க பாகிஸ்தான் சமூக வலைதளங்களை பயன்படுத்துகிறது: ராணுவம்

காஷ்மீர் இளைஞர்களை பயங்கரவாதம் நோக்கி இழுக்க பாகிஸ்தான் சமூக வலைதளங்களை பயன்படுத்துகிறது என்று இந்திய ராணுவம் குற்றம் சாட்டியுள்ளது.
காஷ்மீர் இளைஞர்களை பயங்கரவாதம் நோக்கி இழுக்க பாகிஸ்தான் சமூக வலைதளங்களை பயன்படுத்துகிறது: ராணுவம்
Published on

உதாம்பூர்,

காஷ்மீர் இளைஞர்களை பயங்கரவாதம் நோக்கி இழுக்க பாகிஸ்தான் சமூக வலைதளங்களை பயன்படுத்துகிறது என்று ராணுவத்தின் மூத்த அதிகாரி தெரிவித்துள்ளார். உதாம்பூரில் பேசிய லெப்டினட் ஜெனரல் ரன்பீர் சிங் கூறியதாவது:- ஜம்மு காஷ்மீர் இளைஞர்களிடம் ஆதரவை பெறுவதற்காகவும், அவர்களை பயங்கரவாதம் நோக்கி இழுக்கவும் பாகிஸ்தான் ராணுவம் சமூக வலைதளங்களை பயன்படுத்துகிறது. காஷ்மீரில் அமைதி மற்றும் நிலைத்தன்மையை சீர்குலைக்க முயற்சிக்கிறது. பயங்கரவாதம் ஒட்டு மொத்த உலகத்துக்கே அச்சுறுத்தலாக உள்ளது.

இந்திய ராணுவத்தின் பயங்கரவாதத்துக்கு எதிரான நடவடிக்கை தற்போது முக்கிய கட்டத்தை எட்டியுள்ளது. வரும் ஆண்டுகளில், காஷ்மீரில் அமைதி மற்றும் செழுமை வளர்ச்சியை நாம் காண்போம் என்ற நம்பிக்கை உள்ளது. பயங்கரவாத முகாம்கள் மீது மீண்டும் ஒரு சர்ஜிக்கல் தாக்குதல் நடத்துவதற்கான வாய்ப்புகள் நிறைய உள்ளன" என்றார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com