ஜம்மு எல்லையில் போர்நிறுத்தத்தை மீறி பாகிஸ்தான் தாக்குதல் - பதிலடி கொடுத்த இந்தியா


ஜம்மு எல்லையில் போர்நிறுத்தத்தை மீறி பாகிஸ்தான் தாக்குதல் - பதிலடி கொடுத்த இந்தியா
x
தினத்தந்தி 5 Aug 2025 9:55 PM IST (Updated: 5 Aug 2025 11:12 PM IST)
t-max-icont-min-icon

ஜம்மு காஷ்மீரின் பூஞ்ச் அருகே போர்நிறுத்தத்தை மீறி பாகிஸ்தான் துப்பாக்கிச்சூடு தாக்குதல் நடத்தியது.

ஜம்மு காஷ்மீர்,

ஜம்மு-காஷ்மீரின் பூஞ்ச் பகுதியில் உள்ள கட்டுப்பாட்டுக் கோடு அருகே இன்று பாகிஸ்தான் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி, 10 முதல் 15 நிமிடங்கள் வரை துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாக பிடிஐ செய்தி நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது.

இந்த தாக்குதலுக்கு இந்திய ராணுவமும் தக்க பதிலடி கொடுத்தது, துப்பாக்கிச் சூடு தற்போது நிறுத்தப்பட்டுள்ளது. இருப்பினும், பயங்கரவாதிகள் ஊடுருவ முயற்சிக்கக்கூடும் என்ற தகவல்கள் கிடைத்துள்ளதால், எல்லைக் கட்டுப்பாடு கோடு முழுவதும் உயர் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

எல்லைப் படையினரை ஈடுபடுத்தவும், அவர்களின் நுழைவை எளிதாக்கவும் இந்த துப்பாக்கிச் சூடு ஒரு திசைதிருப்பல் தந்திரமாக இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.

கடந்த 2019 ஆம் ஆண்டு ஜம்மு-காஷ்மீரில் பிரிவு 370 ரத்து செய்யப்பட்ட ஆண்டு நிறைவில் போர் நிறுத்தம் நிகழ்ந்தது. கடந்த மே மாதம் ஆபரேஷன் சிந்தூர் நடத்திய பிறகு நடந்த முதல் போர் நிறுத்த மீறல் சம்பவம் இதுவாகும்.

1 More update

Next Story