

புதுடெல்லி,
இந்திய சிவில் மற்றும் ராணுவ விமானங்கள் தங்களது வான்வெளியைப் பயன்படுத்த விதிக்கப்பட்டிருந்த தடையை மேலும் ஒரு மாதத்திற்கு நீட்டித்து பாகிஸ்தான் உத்தரவு பிறப்பித்துள்ளது.
காஷ்மீரில் பஹல்காம் பயங்கரவாத தாக்குதலைத் தொடர்ந்து, இந்தியா பாகிஸ்தானுக்கு பல தடைகளை விதித்தது. இதைத் தொடர்ந்து 2025-ம் ஆண்டு ஏப்ரல் 23-ந்தேதி முதல் இந்திய விமானங்கள் பாகிஸ்தான் வான்பரப்பில் பறக்க முதன் முதலில் தடையை விதித்தது. இருநாட்டு பதற்றம் காரணமாக, இந்தத் தடை குறிப்பிட்ட கால இடைவெளியில் தொடர்ந்து நீட்டிக்கப்பட்டு வருகிறது.
தற்போது மீண்டும் இத்தடை நீட்டிக்கப்பட்டு, வருகிற நவம்பர் 24-ந்தேதி வரை அமலில் இருக்கும் என பாகிஸ்தான் விமான நிலைய ஆணையம் அறிவித்துள்ளது.