பாகிஸ்தான் கொரோனா வைரஸ் நோயாளிகளை இந்தியாவுக்கு ஏற்றுமதி செய்து வருகிறது - காஷ்மீர் டிஜிபி

பாகிஸ்தான் கொரோனா வைரஸ் நோயாளிகளை இந்தியாவுக்கு ஏற்றுமதி செய்து வருகிறது என்று ஜம்மு-காஷ்மீர் டிஜிபி தில்பாக் சிங் தெரிவித்து உள்ளார்.
பாகிஸ்தான் கொரோனா வைரஸ் நோயாளிகளை இந்தியாவுக்கு ஏற்றுமதி செய்து வருகிறது - காஷ்மீர் டிஜிபி
Published on

ஸ்ரீநகர்

பாகிஸ்தான் கொரோனா வைரஸ் நோயாளிகளை இந்தியாவுக்கு ஏற்றுமதி செய்து வருகிறது என்று ஜம்மு-காஷ்மீர் காவல் இயக்குநர் ஜெனரல் (டிஜிபி) தில்பாக் சிங் கவலை தெரிவித்து உள்ளார்.

ஜம்மு-காஷ்மீர் காவல் இயக்குநர் ஜெனரல் (டிஜிபி) தில்பாக் சிங் கூறியதாவது:-

முன்னர் பயங்கரவாதிகளை மட்டுமே அனுப்பிய பாகிஸ்தான் இப்போது கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களையும் அனுப்பத் தொடங்கியுள்ளது என்பது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

இது கவலைக்குரிய விஷயம். அவர்கள் இங்கு வந்து இங்குள்ள மக்களிடையே நோய் தொற்றை பரப்புவார்கள். முன்னெச்சரிக்கை தேவை என கூறினார்.

பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் 4,328 பேர் கொரோனாவால் பாதிக்கப்ட்டு உள்ளனர். சிந்து மாகாணத்தில் 3,053, கைபர்-பக்துன்க்வா மாகாணத்தில் 1,345, பலூசிஸ்தான் 495, கில்கிட்-பால்டிஸ்தான் 284, இஸ்லாமாபாத் 194 மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் 51 கொரோனாநோயாளிகள் பதிவாகியுள்ளனர். இதற்கிடையில், கொரோனா வைரஸ் தொற்று காரணமாக ஆப்கானிஸ்தானில் சிக்கித் தவிக்கும் 92 பெண்கள் உட்பட குறைந்தது 492 பாகிஸ்தானியர்கள் டோர்காம் எல்லையில் இருந்து தங்கள் நாட்டுக்கு திரும்பியுள்ளனர் என கூறப்படுகிறது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com