

புதுடெல்லி
கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் வேகமாக பரவி வருகிறது. சீனாவில் இருந்து பரவ தொடங்கிய இந்த கொடிய வைரஸ் உலகம் முழுவதும் உயிர்பலி வாங்கி வருகிறது. இந்தியாவிலும் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோர் கண்டறியப்பட்டு உள்ளனர். இந்தியாவில் கொரோனா வைரசால் இதுவரை 87 பேர் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க மத்திய அரசு அனைத்து விதமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும், தீவிரமான தடுப்பு வழிமுறைகளையும் நடை முறைப்படுத்தி வருகிறது. மக்களுக்கு போதுமான விழிப்புணர்வு பிரச்சாரங்களைச் செய்து வருகிறது.
இந்நிலையில், பிரதமர் மோடி வீடியோ கான்பரன்சிங் மூலம் கொரோனா வைரசை எதிர்த்து போரிடுவது தொடர்பாக சார்க் நாடுகளின் தலைவர்கள் அனைவரும் ஒன்றாக இணைந்து திட்டமிட்டு செயல்திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார். மேலும் நம்முடைய நாட்டு மக்கள் ஆரோக்கியமாகவும், நலமாகவும் வாழ்வதற்கு நாம் அனைவரும் வீடியோ கான்பிரன்ஸிங் மூலம் கலந்தாய்வு செய்ய வேண்டும் என கேட்டு கொண்டார்.
சார்க் நாடுகள் கூட்டமைப்பில் இந்தியா, பாகிஸ்தான், வங்காள தேசம், இலங்கை, பூட்டான், மாலத்தீவு, நேபாளம் ஆகிய நாடுகள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
இந்திய பிரதமர் மோடி யின் வீடியோ கான்பிரன்ஸிங் மூலம் கலந்தாய்வு திட்டத்தில் கலந்து கொள்வதை பாகிஸ்தான் உறுதிப்படுத்தியுள்ளது.
பாகிஸ்தானிய பிரதமரின் சிறப்பு உதவியாளர் (எஸ்ஏபிஎம்) டாக்டர் ஜாபர் மிர்சா சார்க் தலைவர்களின் வீடியோ மாநாட்டில் பங்கேற்பார்.
பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ஆயிஷா ஃபாரூகி வெளியிடுள்ள டுவிட்டில்
கொரோனா வைரஸ் அச்சுறுத்தலுக்கு உலக மற்றும் பிராந்திய மட்டத்தில் ஒருங்கிணைந்த முயற்சிகள் தேவை. இந்த விவகாரத்தில் சார்க் உறுப்பு நாடுகளின் வீடியோ கான்பிரன்ஸிங் கலந்தாய்வில் பங்கேற்க நாங்கள் தொடர்பு கொண்டுள்ளோம் என கூறி உள்ளார். இது தூதரக தொடர்புகள் மூலமாகவும் இந்திய தரப்புக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுபோல் நேபாளம், பூட்டான், இலங்கை மற்றும் மாலத்தீவு பிரதமர்கள் டுவிட்டரில் இந்த திட்டத்தை ஏற்றுக்கொண்டதை உறுதிப்படுத்தி உள்ளனர்.
இலங்கையின் செயல் உயர் தூதர் நிருபர்களிடம் கூறியதாவது:-
உலகை அச்சுறுத்தும் கொரோன வைரஸ் தொற்றுநோய்க்கு எதிராக போராட பிரதமர் நரேந்திர மோடியின் முயற்சி நல்ல முயற்சி . இந்த சரியான நேரத்தில் எடுக்கும் முயற்சியை நாங்கள் வரவேற்கிறோம். இலங்கை ஜனாதிபதி கோத்தபய ராஜபக்ஷ பிரதமர் மோடியின் முன்முயற்சி மற்றும் இதுதொடர்பான கலந்துரையாடலில் சேரவும், எங்கள் கற்றல் மற்றும் சிறந்த நடைமுறைகளைப் பகிர்ந்து கொள்ளவும், மற்ற சார்க் உறுப்பினர்களிடமிருந்து கற்றுக்கொள்ளவும் விருப்பம் தெரிவித்துள்ளார் என கூறினார்.
இந்திய அரசாங்கத்தின் முன்மொழிவை ஆப்கானிஸ்தான் அரசு ஸ்பாக்ஸ் செடிக் செடிக்கியூ ஏற்றுக்கொண்டு உள்ளது.
அது வெளியிட்டு உள்ள தகவலில் இது ஒரு முக்கியமான அழைப்பு என்று நாங்கள் நம்புகிறோம், ஆப்கானிஸ்தான் அரசாங்கம் அதை வரவேற்கிறது மற்றும் அனைத்து சார்க் உறுப்பினர்களுடன் இணைந்து பணியாற்ற ஆவலாக உள்ளோம் என கூறி உள்ளது.
இந்தியாவுக்கான ஆப்கானிஸ்தான் தூதர் தாஹிர் காதிரி, கொரோனா வைரஸ் பாதிப்பு குறித்த சார்க் நாடுகள் குறித்த பிரதமர் மோடியின் திட்டத்தை சரியான நேரத்தில் எடுத்துள்ளார். கூட்டணியாக நாங்கள் நிற்போம், பிளவுபட்டால் வீழ்வோம்
வங்காள தேசம் பிரதிநிதித்துவத்தை உறுதிப்படுத்திய அதன் வெளியுறவு மந்திரி ஏ.கே. மோமன், "இது ஒரு நல்ல திட்டம்" என கூறினார்.