எல்லையில் பாகிஸ்தான் அத்துமீறல்: இந்திய ராணுவம் தக்க பதிலடி

பாகிஸ்தான் ராணுவம் எல்லையில் அத்துமீறி சிறிய ரக ஆயுதங்கள் மூலம் தாக்குதல் நடத்தி வருகிறது.
எல்லையில் பாகிஸ்தான் அத்துமீறல்: இந்திய ராணுவம் தக்க பதிலடி
Published on

ஸ்ரீநகர்,

போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி எல்லையில் தாக்குதல் நடத்துவதை பாகிஸ்தான் வாடிக்கையாகக் கொண்டுள்ளது. பாகிஸ்தானின் இத்தகைய தாக்குதல்களுக்கு இந்திய ராணுவம் தக்க பதிலடி கொடுப்பதோடு, அநாட்டு தூதரக அதிகாரிகளை நேரில் அழைத்து கண்டனத்தையும் பதிவு செய்து வருகிறது. எனினும் பாகிஸ்தான் திருந்தியபாடில்லை.

கடந்த மாதத்தில் மட்டும் பாகிஸ்தான் ராணுவம், எல்லையில் 50-க்கும் மேற்பட்ட முறை அத்துமீறி தாக்குதல் நடத்தியது. இந்த நிலையில், இன்று அதிகாலை 3.20 மணியளவில் ஜம்மு காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் உள்ள மன்கோட் செக்டாரில், பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல் நடத்தியுள்ளது. பாகிஸ்தானின் தாக்குதலுக்கு இந்திய ராணுவமும் தக்க பதிலடி கொடுத்து வருகிறது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com