

ஜம்மு,
காஷ்மீர் மாநிலம் பூஞ்ச் மாவட்டத்தில் உள்ள கிருஷ்ணா காதி பிரிவில் எல்லை கட்டுப்பாட்டு கோடு அருகே பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல் நடத்தியது. இதற்கு இந்திய வீரர்கள் பதிலடி கொடுத்தனர்.
பாகிஸ்தான் ராணுவத்தினர் குண்டுவீசி தாக்கியதில், எல்லை பாதுகாப்பு படை சப்-இன்ஸ்பெக்டர் சத்யபால் சிங் படுகாயம் அடைந்தார். உடனடியாக அவர் மீட்கப்பட்டு ராஜோரி ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.