எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் மீண்டும் அத்துமீறல்

எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் நேற்று மாலை 6 மணியளவில் அத்துமீறி தாக்குதல் நடத்தியது.
எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் மீண்டும் அத்துமீறல்
Published on

ஸ்ரீநகர்,

போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி எல்லையில் தாக்குதல் நடத்துவதை பாகிஸ்தான் ராணுவம் வாடிக்கையாக கொண்டுள்ளது. பாகிஸ்தானின் அத்துமீறிய தாக்குதல்களுக்கு இந்திய ராணுவம் தக்க பதிலடி கொடுத்து வருகிறது. எனினும் பாகிஸ்தான் ராணுவம் திருந்தியபாடில்லை.

இந்த நிலையில், ஜம்மு காஷ்மீரின் ராஜோரி மாவட்டத்தில் உள்ள நவ்ஷேரா செக்டாரில் உள்ள எல்லைக் கட்டுப்பாட்டு பகுதிகளில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல் நடத்தியது. பாகிஸ்தானின் அத்துமீறலுக்கு இந்திய ராணுவம் தக்க பதிலடி கொடுத்தது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com