ஜம்மு காஷ்மீர்: எல்லையில் பாகிஸ்தான் மீண்டும் அத்துமீறல்

எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல் நடத்தியுள்ளது.
ஜம்மு காஷ்மீர்: எல்லையில் பாகிஸ்தான் மீண்டும் அத்துமீறல்
Published on

ஸ்ரீநகர்,

போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி எல்லையில் தாக்குதல் நடத்துவதை பாகிஸ்தான் வாடிக்கையாகக் கொண்டுள்ளது. பாகிஸ்தானின் அத்து மீறிய தாக்குதலுக்கு இந்திய ராணுவமும் தக்க பதிலடி கொடுத்து வருகிறது.

இந்த நிலையில் ஜம்மு-காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் உள்ள பாலகோட் செக்டரில் பாகிஸ்தான் ராணுவம் இன்று மீண்டும் அத்துமீறலில் ஈடுபட்டது. சிறிய ரக ஆயுதங்கள் மற்றும் மோட்டார் குண்டுகள் மூலம் இந்த தாக்குதல் நடத்தப்பட்டது. இதற்கு இந்திய ராணுவம் தரப்பிலும் தகுந்த பதிலடி கொடுக்கப்பட்டது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com