டெல்லியில் பயங்கரம்: பர்சை பறித்த கொள்ளையர்கள்; இ-ரிக்சாவில் இருந்து விழுந்த பெண் உயிரிழப்பு

டெல்லியில் பைக்கில் இருந்தபடி கொள்ளையர்கள் பையை பறித்ததில் இ-ரிக்சாவில் இருந்து தவறி விழுந்த பெண் உயிரிழந்து உள்ளார்.
டெல்லியில் பயங்கரம்: பர்சை பறித்த கொள்ளையர்கள்; இ-ரிக்சாவில் இருந்து விழுந்த பெண் உயிரிழப்பு
Published on

புதுடெல்லி,

டெல்லியில் பிரசாந்த் விகார் பகுதியில் சுமித்ரா மிட்டல் என்ற 56 வயது பெண் நேற்று இ-ரிக்சாவில் ஏறி பயணித்து உள்ளார். வழியில், பைக் ஒன்றில் வந்த அடையாளம் தெரியாத சில நபர்கள் பெண்ணிடம் இருந்த பர்சை பறித்து செல்ல முயன்றுள்ளனர்.

உடனடியாக உஷாரான அந்த பெண் பர்சை பறிக்க விடாமல் இழுத்து பிடித்து கொண்டதுடன், போராடி அவர்களை தடுக்க முற்பட்டு உள்ளார். இதனால், ஆத்திரத்தில் அவர்கள் பர்சை இழுத்ததில் இ-ரிக்சாவில் இருந்து அந்த பெண் தவறி விழுந்து உள்ளார்.

இதில், அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டு உள்ளது. இதன்பின் அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் உதவியுடன் அவர் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டார்.

எனினும், அதில் பலனின்றி அவர் உயிரிழந்து விட்டார். இதனை தொடர்ந்து பல தனிப்படைகளை அமைத்து தப்பியோடிய நபர்களை கைது செய்யும் பணியில் ஈடுபட்டு வருகிறோம் என டெல்லி போலீசார் தெரிவித்து உள்ளனர்.

சுமித்ரா தனது இளைய மகனின் மனைவி மற்றும் பேரனுடன் ஒன்றாக வசித்து வருகிறார். துணிக்கடை ஒன்றையும் நடத்தி வருகிறார். சகோதரரை பார்ப்பதற்காக செல்லும் வழியில் இந்த சம்பவம் நடந்து உள்ளது. தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com