ஸ்மார்ட்போன் வாங்குவதற்காக ஆண் குழந்தையை விற்ற பெற்றோர் - அதிர்ச்சி சம்பவம்

குழந்தையை விற்ற பெற்றோர் அந்த பணத்தில் ரூ.25,000 மதிப்பில் ஒரு ஸ்மார்ட்போனையும், ரூ.62,000 மதிப்பில் ஒரு தங்க சங்கிலியையும் வாங்கியுள்ளனர்.
ஸ்மார்ட்போன் வாங்குவதற்காக ஆண் குழந்தையை விற்ற பெற்றோர் - அதிர்ச்சி சம்பவம்
ஆண் குழந்தை
Published on: 

மும்பை,

மராட்டியத்தில் ஸ்மார்ட்போன் மற்றும் தங்க சங்கிலி வாங்குவதற்காக தங்களின் ஆண் குழந்தையை ரூ.1.20 லட்சத்திற்கு விற்ற பெற்றோர் உட்பட 7 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். முகுந்த்வாடி பகுதியைச் சேர்ந்த கூலித்தொழிலாளி தம்பதி, குடும்ப வறுமையால் அல்லாமல் தங்களது ஆடம்பர ஆசைக்காக ஆண் குழந்தையை விற்றுள்ள அதிர்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது.

காரணம்

குழந்தையை விற்று கிடைத்த ரூ.1.20 லட்சம் பணத்தில், அந்த பெற்றோர் ரூ.25,000 மதிப்பில் ஒரு ஸ்மார்ட்போனையும், ரூ.62,000 மதிப்பில் ஒரு தங்க சங்கிலியையும் வாங்கியுள்ளனர். இதுகுறித்த ரகசிய தகவலின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி, இந்த பொருட்களை போலீசார் தற்போது பறிமுதல் செய்துள்ளனர்.

4 முறை விற்கப்பட்ட குழந்தை

முதற்கட்டமாக சீமா ரேஷ்வால் என்ற பெண்ணுக்கு ரூ.1.20 லட்சத்திற்கு விற்கப்பட்ட குழந்தை, அங்கிருந்து அடுத்தடுத்த புரோக்கர்கள் கைமாறி, இறுதியில் ஐதராபாத்தில் உள்ள உமா கத்காம் என்ற பெண்ணிடம் ரூ.3.50 லட்சம் வரைவிற்கப்பட்டுள்ளது. அந்த பெண்ணிடம் இருந்த குழந்தையை போலீசார் பத்திரமாக மீட்டு, குழந்தை நலக் குழுவிடம் ஒப்படைத்துள்ளனர். குழந்தை தற்போது காப்பகம் ஒன்றில் பராமரிக்கப்பட்டு வருகிறது.

கைது நடவடிக்கை

குழந்தையின் பெற்றோர், இடைத்தரகர்களாக செயல்பட்ட சீமா ரேஷ்வால், சங்கீதா, சுரேஷ் குண்டுகா மற்றும் குழந்தையை வாங்கிய ஹைதராபாத் பெண் உட்பட 7 பேரை முகுந்த்வாடி போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com