நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர்: நாளை அனைத்துக்கட்சி கூட்டம்

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் நாளை மறுதினம் தொடங்க உள்ளது.
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர்: நாளை அனைத்துக்கட்சி கூட்டம்
Published on

புது டெல்லி,

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் நாளை மறுதினம் தொடங்க உள்ளது. 25 நாட்கள் 19 அமர்வுகளாக நடைபெறும் மழைக்கால கூட்டத்தொடர் அடுத்த மாதம் 15ம் தேதி நிறைவடைய உள்ளது.

இந்த மழைக்கால கூட்டத்தொடரில் பல்வேறு முக்கிய மசோதாக்களை தாக்கல் செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. அதேவேளை, நீட் தேர்வு முறைகேடு, ராமர் கோவில் காணிக்கை முறைகேடு உள்பட பல்வேறு விவகாரங்கள் குறித்து நாடாளுமன்றத்தில் பிரச்சினை எழுப்ப எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன.

அனைத்துக்கட்சி கூட்டம்

இந்நிலையில், நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் நாளை மறுதினம் தொடங்க உள்ள நிலையில் அனைத்துக்கட்சி கூட்டம் நாளை நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் கலந்துகொள்ளும்படி அனைத்து கட்சிகளுக்கும் மத்திய அரசு அழைப்பு விடுத்துள்ளது. நாளை நடைபெறும் அனைத்துக்கட்சி கூட்டத்தில் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரை சுமூகமாக நடத்த ஒத்துழைக்குமாறு சபாநாயகர் வலியுறுத்த உள்ளார்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com