நாடாளுமன்ற கூட்டத்தொடர்: மத்திய மந்திரிகளுடன் பிரதமர் மோடி ஆலோசனை

அரசுப்பணிகளில் எவ்வித தேக்கமும் இருக்கக்கூடாது என மந்திரிகளுக்கு பிரதமர் உத்தரவிட்டார்.
நாடாளுமன்ற கூட்டத்தொடர்: மத்திய மந்திரிகளுடன் பிரதமர் மோடி ஆலோசனை
Published on: 

புதுடெல்லி,

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் அடுத்த மாதம் (டிசம் பர்) நடக்கிறது. இதை முன்னிட்டு டெல்லி பாரத மண்டபத்தில் மத்திய மந்திரிகளை பிரதமர் மோடி சந்தித்தார். இந்த உயர்மட்ட ஆலோசனைக்கூட்டம் 4 மணி நேரத்துக்கும் மேல் நடைபெற்றது. இதில் மத்திய மந்திரிகள் அனைவரும் கலந்து கொண்டனர்.

நிர்வாக செயல்பாடுகளை வேகப்படுத்துவது மற்றும் அடுத்த மாதம் தொடங்கவுள்ள நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடருக்கான முன்னேற்பாடுகள் குறித்தும் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. மேலும் 2047-ம் ஆண்டுக்குள் இந்தியாவை வளர்ச்சியடைந்த நாடாக மாற்றுவதற்கான குறுகிய கால மற்றும் நீண்ட கால செயல் திட்டங்கள் குறித்து விரிவாக ஆய்வு செய்யப்பட்டது. சாமானிய மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவது மற்றும் தொழில் தொடங்குவதை எளிதாக்குவது தொடர்பான நிர்வாக சீர்திருத்தங்களை விரைவுபடுத்த வேண்டும் என பிரதமர் வலியுறுத்தினார்.

மத்திய அரசின் மக்கள் நலத்திட்டங்களின் பலன்கள் தகுதியான அனைத்துப் பயனாளிகளையும் 100 சத வீதம் சென்றடைவதை மந்திரிகள் உறுதி செய்ய வேண்டும் என்றும், மக்களின் அன்றாட வாழ்க்கையில் தேவையற்ற நிர்வாக குறுக்கீடுகள் இருக்கக் கூடாது என்றும் பிரதமர் அறிவுறுத்தினார். இந்த ஆண்டு மற்றும் எதிர்கால இலக்குகளை நோக்கி வேகமாகச் செயல்பட வேண்டும் எனவும், அரசுப்பணிகளில் எவ்வித தேக்கமும் இருக்கக்கூடாது என மந்திரிகளுக்கு பிரதமர் கண்டிப்பாக உத்தரவிட்டார்.

முன்னதாக, மத்திய மந்திரிசபை செயலாளர் டி.வி.சோமநா தன் ஒட்டுமொத்த நிர்வாக சீர்திருத்தங்கள் மற்றும் மக்கள் நலன் சார்ந்த நடவடிக்கைகள் குறித்து விளக்கினார். நிதி ஆயோக் உறுப்பினர் ராஜீவ் கவுபா மற்றும் பல்வேறு துறைக ளைச் சேர்ந்த 9 செயலாளர்கள் தங்களது அமைச்சகங்களின் செயல்பாடுகள் மற்றும் திட்டங்களின் முன்னேற்றம் குறித்து விளக்கக் காட்சிகளை சமர்ப்பித்தனர்.

வெளியுறவுத்துறை மந்திரி எஸ்.ஜெய்சங்கர், பிரதமரின் சமீபத்திய வெளிநாட்டு பயணங்கள் மற்றும் அதன் மூலம் கிடைத்த முக்கியப் பலன்கள் குறித்து விளக்கினார்.

X