638 போலீஸ் நிலையங்களில் தொலைபேசி இல்லை..!! - நாடாளுமன்ற நிலைக்குழு அதிர்ச்சி தகவல்

நாடு முழுவதும் 638 போலீஸ் நிலையங்களில் தொலைபேசி வசதி இல்லை என்று நாடாளுமன்ற நிலைக்குழு அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

புதுடெல்லி,

காங்கிரஸ் எம்.பி. ஆனந்த் சர்மா தலைமையிலான உள்துறை தொடர்பான நாடாளுமன்ற நிலைக்குழுவின் அறிக்கை நேற்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.

அதில் கூறப்பட்டுள்ள முக்கிய அம்சங்கள் வருமாறு:-

கடந்த 2020-ம் ஆண்டு ஜனவரி 1-ந் தேதி நிலவரப்படி, நாடு முழுவதும் மொத்தம் உள்ள 16 ஆயிரத்து 833 போலீஸ் நிலையங்களில் 257 போலீஸ் நிலையங்களில் வாகனங்களே இல்லை. 638 போலீஸ் நிலையங்களில் தொலைபேசி வசதி இல்லை. 143 போலீஸ் நிலையங்களில் ஒயர்லெஸ் அல்லது மொபைல் போன் வசதி இல்லை.

காஷ்மீர் போன்ற எல்லைப்புற மாநிலத்தில் கூட கணிசமான போலீஸ் நிலையங்களில் தொலைபேசி, ஒயர்லெஸ் வசதி இல்லை. இந்த வசதிகளை அதிகரிக்குமாறு சம்பந்தப்பட்ட மாநிலங்களுக்கு மத்திய அரசு உத்தரவிட வேண்டும் என்று அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com