

புதுடெல்லி,
வங்காளதேசம், பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில் சிறுபான்மையினராக இருந்தவர்கள், இந்தியாவில் 7 ஆண்டுகள் குடியிருந்தால், அவர்களுக்கு இந்திய குடியுரிமை வழங்க வகைசெய்யும் குடியுரிமை திருத்த மசோதா, நாடாளுமன்ற மக்களவையில் நிறைவேற்றப்பட்டது.
இதுபோல், முத்தலாக் தடை மசோதாவும் மக்களவையில் நிறைவேற்றப்பட்டது. ஆனால், இம்மசோதாக்களின் சில அம்சங்களுக்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்ததால், மாநிலங்களவையில் இம்மசோதாக்கள் நிறைவேறாமல் நிலுவையில் இருந்தன.
இந்நிலையில், 16-வது மக்களவையின் பதவிக்காலம் முடிவடைவதால், மக்களவையை கலைத்து ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் உத்தரவிட்டார். மக்களவையில் நிறைவேறிய மசோதா, மாநிலங்களவையில் நிலுவையில் இருந்தால், மக்களவை கலைக்கப்பட்டவுடன், அம்மசோதா காலாவதி ஆகிவிடும். அந்த அடிப்படையில், குடியுரிமை, முத்தலாக் தடை மசோதாக்கள் காலாவதி ஆகிவிட்டன.