டெல்லியில் பட்டாசு தடைக்கு எதிரான மனு - அக்டோபர் 10-தேதி விசாரிக்க சுப்ரீம் கோர்ட் ஒப்புதல்

பட்டாசு தடைக்கு எதிரான மனுவை அக்டோபர் 10-ந்தேதி விசாரிக்க சுப்ரீம் கோர்ட் ஒப்புதல் அளித்துள்ளது.
டெல்லியில் பட்டாசு தடைக்கு எதிரான மனு - அக்டோபர் 10-தேதி விசாரிக்க சுப்ரீம் கோர்ட் ஒப்புதல்
Published on

புதுடெல்லி,

டெல்லியில் அனைத்து வகையான பட்டாசுகளின் உற்பத்தி, சேமிப்பு, விற்பனை மற்றும் பயன்பாட்டிற்கு 2023 ஜனவரி 1 வரை தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவை ரத்து செய்யக்கோரி பா.ஜ.க. எம்.பி. மனோஜ் திவாரி சுப்ரீம் கோர்ட்டில் ரிட் மனு தாக்கல் செய்தார்.

இந்த மனுவை அவசரமாக விசாரிக்கக்கோரி முறையிடப்பட்டது. இந்த முறையீட்டை பரிசீலித்த சுப்ரீம் கோர்ட், இந்த மனுவை அக்டோபர் 10-ந்தேதி விசாரிக்க ஒப்புதல் அளித்துள்ளது. 

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com