தமிழக சட்டமன்ற தேர்தலை ரத்து செய்யக் கோரி சுப்ரீம்கோர்ட்டில் மனு.. விரைவில் விசாரணை

தமிழ்நாட்டில் வாக்காளர்களுக்கு ஓட்டுக்கு லஞ்சம் கொடுக்கப்படுவதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது.
தமிழக சட்டமன்ற தேர்தலை ரத்து செய்யக் கோரி சுப்ரீம்கோர்ட்டில் மனு.. விரைவில் விசாரணை
Published on

புதுடெல்லி,

234 தொகுதிகளுக்கான தமிழக சட்டமன்ற தேர்தல் வருகிற 23-ந்தேதி நடைபெறவுள்ளது. தேர்தலில் பதிவாகும் வாக்குகளின் எண்ணிக்கை அடுத்த மாதம் (மே) 4-ந்தேதி நடைபெற உள்ளது. வரும் 21ம் தேதி மாலை வரை மட்டுமே தேர்தல் பிரசாரம் செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளதால், அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் தமிழக சட்டமன்ற தேர்தலை ரத்து செய்யக் கோரி சுப்ரீம்கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக மதுரையை சேர்ந்த கே.கே.ரமேஷ் என்பவர் தரப்பில் சுப்ரீம்கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில், “தமிழ்நாட்டில் கட்சிகள் பணம், வாக்காளர்களுக்கு இலவசம் அறிவித்து வாக்குகள் கேட்கப்பட்டு வருகின்றன. அரசியல் சாசன விதிகளுக்கு மட்டுமல்லாமல் தேர்தல் நடத்தை விதிகளுக்கும் இது எதிரானது. வழக்கில் இறுதி உத்தரவு பிறப்பிக்கப்படும் வரையில் தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலை நிறுத்தி வைக்க வேண்டும். இதுகுறித்து இந்திய தலைமை தேர்தல் ஆணையத்திற்கு சுப்ரீம்கோர்ட்டு உத்தரவு பிறப்பிக்க வேண்டும்” என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வரும் திங்கட்கிழமை அவசர வழக்காக பட்டியலிடப்பட்டு சுப்ரீம்கோர்ட்டு இதனை விசாரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com