இரட்டை இலை சின்னத்துக்கு தடைகோரிய மனு: தேர்தல் ஆணையத்திற்கு நோட்டீஸ்

இரட்டை இலை சின்னம் தொடர்பான புகார் மனு மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தப்பட்டுள்ளது.
இரட்டை இலை சின்னத்துக்கு தடைகோரிய மனு: தேர்தல் ஆணையத்திற்கு நோட்டீஸ்
Published on

புதுடெல்லி,

அ.தி.மு.க.வுக்கு இரட்டை இலை சின்னம் வழங்கியது, கட்சியின் கொடி. பெயரை பயன்படுத்துவது தொடர்பாக புகழேந்தி அளித்த புகார்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க தேர்தல் கமிஷனுக்கு, டெல்லி ஐகோர்ட்டு கடந்த 2004-ம் ஆண்டு உத்தரவிட்டது. இந்த உத்தரவு மீது உரிய நடவடிக்கை எடுக்காததால் தேர்தல் கமிஷன் மீது புகழேந்தி கோர்ட்டு அவமதிப்பு வழக்கை தொடர்ந்தார்.

இந்த வழக்கை டெல்லி ஐகோர்ட்டு நேற்று விசாரித்தது. அப்போது தேர்தல் கமிஷன் தரப்பில், புகழேந்தி புகார் மனு மீது முன்னுரிமை அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. இதை பதிவு செய்து கொண்ட ஐகோர்ட்டு, விசாரணையை மே 5-ந் தேதிக்கு தள்ளி வைத்தது.

முன்னதாக தேர்தல் வருவதற்கு முன்பே ஏன் முடிவு எடுக்கவில்லை என்று கேள்வி எழுப்பிய ஐகோர்ட்டு, 4 வாரத்தில் நிலை அறிக்கையை தாக்கல் செய்ய தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட்டது.

X

Daily Thanthi
www.dailythanthi.com