ஜார்கண்டில் ஆர்.எஸ்.எஸ். அலுவலகம் மீது பெட்ரோல் குண்டுவீச்சு

இந்த சம்பவம் குறித்து விசாரிக்க போலீசார் ஒரு சிறப்பு புலனாய்வு குழுவை அமைத்து விசாரித்து வருகின்றனர்
பெட்ரோல்
Published on

ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில் உள்ள ஆர்.எஸ்.எஸ். அலுவல கம் மீது அடையாளம் தெரியாத 2 சமூக விரோதிகள் நள்ளிர வில் பெட்ரோல் குண்டுவீசி தாக்குதல் நடத்தினர். இந்த பெட் ரோல் குண்டுகள் அலுவலகத்தின் உயரமான சுற்றுச்சுவரை தாண்டாமல் வளாகத்துக்கு வெளியே விழுந்தன. இதன் விளை வாக, பெரிய பாதிப்பு ஏற்படவில்லை. இதுகுறித்து ராஞ்சி போலீ சார் கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்து விசா ரணை நடத்தி வருகின்றனர்.

இச்சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்து பா.ஜனதாவின் தேசிய செய்தி தொடர்பாளர் ஷெசாத் பூனாவாலா வெளியிட்ட வீடியோ வில்,"ஜார்கண்டில் ஆர்.எஸ்.எஸ். அலுவலகம் மீது பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்டதாக கூறப்படும் சம்பவம் குறித்து தீவிர விசாரணை நடத்த வேண்டும். இந்த சம்பவம் ஒரு பெரிய சதி யின் ஒரு பகுதியாக தெரிகிறது. இதன் பின்னணியில் உள்ளவர் களை அடையாளம் காண வேண்டும். இது ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா,காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில் நிலவும் சட்டம்-ஒழுங்கு நிலையை பிரதிபலிக்கிறது" என கூறியுள்ளார். இதனிடையே இந்த சம்பவம் குறித்து விசாரிக்க போலீசார் ஒரு சிறப்பு புலனாய்வு குழுவை அமைத்து விசாரித்து வருகின்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com