பெட்ரோல், டீசல் விலையை 35 சதவீதம் குறைக்க வேண்டும் - காங்கிரஸ் வலியுறுத்தல்

பெட்ரோல், டீசல் விலையை 35 சதவிதம் குறைக்க வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி வலியுறுத்தி உள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

புதுடெல்லி,

காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் நேற்று தனது 'டுவிட்டர்' பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

கொள்ளை லாபம்

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை சமீபகாலமாக 35 சதவீதம் குறைந்துள்ளது. ஆனால், அதன் பலனை பொதுமக்களுக்கு கொடுக்க மத்திய அரசு மறுக்கிறது. இதனால், ஏற்கனவே பணவீக்க உயர்வால் அவதிப்படும் மக்கள், மேலும் சிரமப்படுகிறார்கள்.

பெட்ரோல், டீசல் மீதான வரிகளையும் மத்திய அரசு அதிகமாக வசூலிக்கிறது. இதனால், ஏழைகள், நடுத்தர மக்களின் பாக்கெட் கொள்ளையடிக்கப்படுகிறது. பெட்ரோல், டீசல் விற்பனையின் பெயரில் இரக்கமின்றி கொள்ளை லாபம் ஈட்டப்படுகிறது.

விலையை குறையுங்கள்

நடப்பு நிதி ஆண்டில், பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களுக்கு ரூ.1 லட்சம் கோடி லாபம் கிடைக்கும் என்று ஒரு ஆய்வறிக்கை கூறுகிறது. முந்தைய ஆண்டுகளில், ரூ.33 ஆயிரம் கோடி லாபம் மட்டுமே கிடைத்தது குறிப்பிடத்தக்கது.

பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் மட்டுமின்றி, தனியார் எண்ணெய் நிறுவனங்களும் கொள்ளை லாபம் சம்பாதித்து வருகின்றன.

பெட்ரோல், டீசல் விலையை குறைத்தால், அத்தியாவசிய பொருட்கள் உள்பட அனைத்து பொருட்களின் விலையும் குறையும். ஆகவே, பெட்ரோல், டீசல் விலையை 35 சதவீதம் குறைக்க வேண்டும்.

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சி காலத்தில் இருந்த அளவுக்கு விலையை குறைக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com