

லக்னோ,
உத்தரபிரதேச மாநிலம் சகாரன்பூர் மாவட்டம் ஜதியஹெடி கிராமத்தை சேர்ந்தவர் கன்வர்பல். இவருக்கு ஆயூஷ் (வயது 18) என்ற மகன் இருந்தார். ஆயூஷ் அப்பகுதியில் உள்ள பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்தான்.
இதனிடையே, ஆயூஷ் மீது அப்பள்ளியில் படித்து வரும் மாணவியின் பெற்றோர் போலீசில் கடந்த வெள்ளிக்கிழமை காலை பாலியல் புகார் அளித்துள்ளனர்.
இந்நிலையில், பாலியல் புகார் அளிக்கப்பட்ட பிளஸ் 2 மாணவன் ஆயூஷ் வெள்ளிக்கிழமை மதியம் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
ஜதியஹெடி கிராமத்தில் உள்ள தோட்டத்தில் மரத்தில் ஆயூஷ் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இது குறித்து அறிந்த போலீசார், விரைந்து சென்று ஆயூஷ் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இது கொலையா? தற்கொலையா? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
அதேவேளை, மாணவியின் குடும்பத்தினர் தனது மகனை கொன்று தூக்கில் தொங்க விட்டுவிட்டதாக ஆயூஷின் தந்தை கன்வர்பல் குற்றஞ்சாட்டியுள்ளார்.