

புதுடெல்லி,
பிரதமர் மோடி, ஆட்சித் தலைமையில் 25 ஆண்டுகளை நிறைவு செய்வதை, ஓராண்டுக்கு கொண்டாடுவது என பாஜக முடிவு செய்துள்ளது.
பிரதமர் மோடி அரசு பதவிக்கு வந்து அக்டோபர் 7-ந் தேதியோடு 25 ஆண்டுகள் நிறைவு பெற இருக்கிறது. இதனை முன்னிட்டு அடுத்த மாதம் (செப்டம்பர்) 17-ந் தேதி (பிரதமர் மோடி பிறந்தநாள்) முதல் அக்டோபர் மாதம் 2-ந்தேதி வரை (காந்தி பிறந்த நாள்) சேவை மற்றும் உறுதிக்கான பெருவிழா என்ற விழாவை 2 வாரங்கள் நடத்த முடிவு செய்யப்பட்டு இருக்கிறது.
இதனையொட்டி ரத்ததான முகாம்கள், மரம் நடும் இயக்கங்கள், தூய்மை பிரசாரங்கள், நீர் சேமிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் போன்றவை நடத்தப்படுகின்றன.
மேலும் கட்சி பொறுப்பாளர்கள் மாநிலம் விட்டு மாநிலம் சென்று கலாசார பரிமாற்றம் செய்யும் "வேற்றுமையில் ஒற்றுமை" என்ற நிகழ்வும் நடைபெறுகிறது.
சிக்கிம் முதல்-மந்திரியாக பவன்குமார் சாம்லிங், ஒடிஷா முதல்-மந்திரியாக நவீன் பட்நாயக் ஆகியோர் தொடர்ந்து 24 ஆண்டுகளும், மேற்கு வங்க முதல்-மந்திரியாக ஜோதிபாசு 23 ஆண்டுகளும் இருந்துள்ளனர். மோடியின் இந்த சாதனையை ஓராண்டுக்கு கொண்டாட பாஜக முடிவு செய்துள்ளது.