‘மன் கி பாத்’ நிகழ்ச்சிக்கு யோசனை கூறலாம்: நாட்டு மக்களுக்கு மோடி அழைப்பு

24-ந்தேதி ஒலிபரப்பாகும் ‘மன் கி பாத்’ நிகழ்ச்சிக்கு யோசனை கூறுவதற்கு, நாட்டு மக்களுக்கு மோடி அழைப்பு விடுத்துள்ளார்.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

புதுடெல்லி,

பிரதமர் மோடி மாதந்தோறும் கடைசி ஞாயிற்றுக்கிழமைகளில் வானொலி மூலம் நாட்டு மக்களுக்கு உரையாற்றி வருகிறார். மன் கி பாத் (மனதின் குரல்) என அழைக்கப்படும் இந்த நிகழ்ச்சியில் பல்வேறு விவகாரங்கள் குறித்து அவர் பேசுகிறார்.

இந்த நிகழ்ச்சியில் தான் எதைப்பற்றி பேச வேண்டும்? என நாட்டு மக்களிடம் அவர் அடிக்கடி யோசனையும் கேட்டு வருகிறார். அந்தவகையில் வருகிற 24-ந்தேதி ஒலிபரப்பாகும் இந்த மாதத்துக்கான மன் கி பாத் நிகழ்ச்சிக்கு யோசனை வழங்குமாறு நாட்டு மக்களை அவர் கேட்டுக்கொண்டு உள்ளார்.

இது தொடர்பாக அவர் தனது டுவிட்டர் தளத்தில், இந்த மாதம், 24-ந்தேதி மன் கி பாத் நிகழ்ச்சி ஒலி பரப்பாகிறது. இந்த மாத நிகழ்ச்சிக்கு உங்கள் யோசனைகளை வரவேற்கிறேன். அவற்றை நீங்கள் நமோ செயலி அல்லது 1800-11-7800 என்ற எண்ணுக்கு அனுப்பலாம். மேலும் https://mygov.in/group-issue/in என்ற இணையதளத்திலும் பதிவு செய்யலாம் என குறிப்பிட்டு உள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com