பிரதமர் மோடியுடன் விமானப்படை தளபதி சந்திப்பு; முக்கிய ஆலோசனை

இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் உச்சத்தில் இருக்கும் நிலையில் இந்த சந்திப்பு முக்கியத்துவம் பெற்றுள்ளது.
பிரதமர் மோடியுடன் விமானப்படை தளபதி சந்திப்பு; முக்கிய ஆலோசனை
Published on

புதுடெல்லி,

ஜம்மு - காஷ்மீரின் பஹல்காமில், பாகிஸ்தான் பயங்கரவாதிகள் கடந்த மாதம் 22-ந் தாக்குதல் நடத்தினர். இந்த கொடூர தாக்குதலில் அப்பாவி பொதுமக்கள் 26 பேர் கொல்லப்பட்டனர். பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்க முப்படைகளுக்கு முழு அதிகாரத்தை மத்திய அரசு அளித்துள்ளது.

அதே நேரத்தில் பயங்கரவாதிகளுக்கு ஆதரவு அளிக்கும் பாகிஸ்தானை பொருளாதார ரீதியில் பலவீனப்படுத்தும் நடவடிக்கையிலும் இறங்கியுள்ளது. மேலும், சர்வதேச அரங்கில் பாகிஸ்தானை தனிமைப்படுத்தும் நோக்கிலும் பல நடவடிக்கைகளை மத்திய அரசு எடுத்து வருகிறது.

இதனால் இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் உச்சத்தில் இருக்கிறது. இந்நிலையில், இன்று விமானப்படை தலைமை தளபதி அமர் ப்ரீத் சிங், பிரதமர் மோடியை சந்தித்துப் பேசினார். இந்த சந்திப்பின் போது, பயங்கரவாத தாக்குதல் நடத்திய பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுப்பது தொடர்பாக, விமானப்படை தலைமை தளபதி உடன் பிரதமர் மோடி முக்கிய ஆலோசனை நடத்தியிருக்கலாம் என சொல்லப்படுகிறது. 

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com