பிரதமர் மோடி - கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சை சந்திப்பு

டெல்லியில் ஏஐ உச்சி மாநாடு (செயற்கை நுண்ணறிவு) நடைபெற்று வருகிறது
பிரதமர் மோடி - கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சை சந்திப்பு
Published on

டெல்லி,

தலைநகர் டெல்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் இந்திய ஏஐ உச்சி மாநாடு (செயற்கை நுண்ணறிவு) நேற்று முன் தினம் தொடங்கியது. இந்த உச்சி மாநாட்டை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். உச்சி மாநாடு நாளை மறுதினம் வரை நடைபெற உள்ளது.

இந்த உச்சி மாநாட்டில் இலங்கை ஜனாதிபதி அனுர குமார திசநாயகா,பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான், ஐக்கிய அரபு அமீரகம் சார்பில் அபுதாபி இளவரசர் ஷேக் காலித் பின் முகமது பின் ஜயீத் அல் நாஹியான், சுலோவேக்கியா நாட்டின் ஜனாதிபதி பீட்டர் பெல்லேகிரினி உள்பட 20 நாடுகளை சேர்ந்த தலைவர்கள் கலந்து கொண்டுள்ளனர்.

மேலும், கூகுள் நிறுவனத்தின் சிஇஓ சுந்தர் பிச்சை, மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ், ஓபன் ஏஐ சிஇஓ சாம அல்ட்மென் உள்பட பல்வேறு நிறுவனங்களின் தலைவர்களும் இந்த ஏஐ உச்சி மாநாட்டில் கலந்து கொண்டுள்ளனர்.

இந்நிலையில், பிரதமர் மோடியை கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சை டெல்லியில் இன்று சந்தித்தார். இந்த சந்திப்பின்போது ஏஐ தொழில்நுட்பம் குறித்தும் அதில் கூகுள் நிறுவனம் இந்திய மாணவர்கள், ஐடி ஊழியர்கள் பயன் அளிக்கும் வகையில் மேற்கொள்ளும் முயற்சிகள் குறித்து பிரதமர் மோடியும், சுந்தர் பிச்சையும் ஆலோசனை நடத்தினர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com