நோபல் பரிசு பெற்ற அபிஜித் பானர்ஜியுடன் பிரதமர் மோடி சந்திப்பு

பொருளாதார துறையில் இந்த ஆண்டிற்கான நோபல் பரிசை பெற்ற அபிஜித் பானர்ஜி பிரதமர் மோடியை சந்தித்தார்.
நோபல் பரிசு பெற்ற அபிஜித் பானர்ஜியுடன் பிரதமர் மோடி சந்திப்பு
Published on

புதுடெல்லி,

இந்தியாவில் பிறந்த அபிஜித் பானர்ஜி, அவருடைய மனைவியும் பிரான்ஸ் நாட்டில் பிறந்தவருமான எஸ்தர் டப்லோ, அமெரிக்காவின் ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் மைக்கேல் கிரமர் ஆகியோருக்கு இந்த ஆண்டு பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு பகிர்ந்து அளிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

இவர்களுக்கு இந்தியாவில் உள்ள பல தலைவர்கள் வாழ்த்து தெரிவித்தனர். கொல்கத்தா முதல்வர் மம்தா பானர்ஜி, அவரை உருவாக்கியதற்காக கொல்கத்தா மாநிலம் பெருமை அடைந்துள்ளதாக கூறினார்.

இந்நிலையில் நரேந்திர மோடியை பிரதமர் இல்லத்தில் இன்று அபிஜித் பானர்ஜி சந்தித்து பேசினார். அபிஜித்தின் சாதனைகளால் இந்தியா பெருமையடைந்துள்ளதாகவும், மனித உரிமைகள் குறித்த அவரது சிந்தனைகள் மிகத்தெளிவாக இருப்பதாகவும் மோடி தெரிவித்துள்ளார்.

இது குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள பிரதமர் மோடி, நோபல் பரிசு பெற்ற அபிஜித் பானர்ஜியுடனான சந்திப்பு அருமையாக அமைந்தது. மனித உரிமைகள் குறித்த மிகத்தெளிவான சிந்தனைகள் கொண்டவர் அவர். பல்வேறு விஷயங்கள் குறித்து பேசினோம். அவரது சாதனைகளால் இந்தியா பெருமையடைந்துள்ளது. அவருக்கு வாழ்த்துக்கள் என்று பதிவிட்டுள்ளார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com