முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் 93வது பிறந்தநாள்: பிரதமர் மோடி புகழாரம்


முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் 93வது பிறந்தநாள்: பிரதமர் மோடி புகழாரம்
x
தினத்தந்தி 26 Sept 2025 10:16 AM IST (Updated: 26 Sept 2025 10:22 AM IST)
t-max-icont-min-icon

2004 முதல் 2014 ம் ஆண்டு வரை நாட்டின் பிரதமராக மன்மோகன் சிங் செயல்பட்டார்.

டெல்லி,

நாட்டின் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங். இவர் 2004 முதல் 2014 ம் ஆண்டு வரையிலான காங்கிரஸ் அரசில் நாட்டின் பிரதமராக செயல்பட்டார். இவர் 1932ம் ஆண்டு செப்டம்பர் 26ம் தேதி பஞ்சாப்பில் பிறந்தார். அவர் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 26ம் தேதி உயிரிழந்தார்.

இந்நிலையில், முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் 93வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, மறைந்த மன்மோகன் சிங்கிற்கு பிரதமர் மோடி புகழாரம் சூட்டினார். இது தொடர்பாக பிரதமர் மோடி வெளியிட்ட எக்ஸ் பதிவில், முன்னாள் பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங்கின் பிறந்தநாளில் அவருக்கு மரியாதை செலுத்துகிறேன். பொதுவாழ்வில் நமது நாட்டிற்கு அவர் ஆற்றிய பங்களிப்பை நாம் நினைவுகொள்வோம்

இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

1 More update

Next Story