பிஎம் கிசான் திட்டத்தின்கீழ் விவசாயிகளுக்கு 20வது தவணத்தொகையை விடுவித்த பிரதமர் மோடி

பிஎம் கிசான் நிதி திட்டத்தை மத்திய அரசு 2019ம் ஆண்டு தொடங்கியது.
பிஎம் கிசான் திட்டத்தின்கீழ் விவசாயிகளுக்கு 20வது தவணத்தொகையை விடுவித்த பிரதமர் மோடி
Published on

டெல்லி,

பிஎம் கிசான் நிதி திட்டத்தை மத்திய அரசு 2019ம் ஆண்டு தொடங்கியது. இந்த திட்டப்படி, சொந்தமாக விவசாய நிலம் வைத்துள்ள விவசாயக் குடும்பங்களுக்கு உதவித் தொகை வழங்கப்படுகிறது. 4 மாதத்திற்கு ஒரு முறை தலா ரூ.2000/- வீதம் மூன்று தவணைகளில் ஆண்டுக்கு ரூ.6,000/- விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நேரடிப் பணப்பரிமாற்றம் மூலமாக வழங்கப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தின்கீழ் நாடு முழுவதும் இணைந்த விவசாயிகளுக்கு இதுவரை 19 தவணைகளாக 3.69 லட்சம் கோடி ரூபாய் வங்கி கணக்கு மூலம் வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், பிஎம் கிசான் திட்டத்தின் 20வது தவணைத்தொகை விவசாயிகளுக்கு இன்று விடுவிக்கப்பட்டுள்ளது. உத்தரபிரதேசத்தின் வாரணாசியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பிரதமர் மோடி, நாடு முழுவதும் 9 கோடியே 70 லட்சம் விவசாயிகளுக்கு பிஎன் கிசான் திட்டத்தின் 20வது தவணைத்தொகையை விடுவித்தார்.

பிஎம் கிசான் திட்ட பயனாளர்களான 9 கோடியே 70 லட்சம் விவசாயிகளுக்கு 20வது தவணத்தொகையாக தலா ரூ. 2 ஆயிரம் ரூபாய் விகிதம் 20 ஆயிரத்து 500 கோடி ரூபாய் விடுவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிகழ்ச்சியில் உத்தரபிரதேசத்தில் பல்வேறு முடிவுற்ற திட்டப்பணிகளை திறந்து வைத்த பிரதமர் மோடி, 2 ஆயிரத்து 183 கோடி ரூபாய் மதிப்பிலான 52 புதிய திட்டங்களுக்கும் பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com