பாஜகவில் என்னை கடிந்து கொள்ளும் ஒரே தலைவர் இவர்தான்: சுமித்ரா மகாஜன் குறித்து மோடி பேச்சு

பாஜகவில் என்னை கடிந்து கொள்ளும் ஒரே தலைவர் சுமித்ரா மகாஜன் தான் என்று பிரதமர் மோடி பேசினார்.
பாஜகவில் என்னை கடிந்து கொள்ளும் ஒரே தலைவர் இவர்தான்: சுமித்ரா மகாஜன் குறித்து மோடி பேச்சு
Published on

மோடி,

பாஜகவில் என்னை கடிந்து கொள்ளும் ஒரே தலைவர் சுமித்ரா மகாஜன் தான் எனவும் தனது பணியில் மிகவும் அர்ப்பணிப்போடு செயலாற்றுபவர் என்றும் மோடி வெகுவாக அவரை பாராட்டி பேசினார்.

இந்தூரில் தேர்தல் பிரசார பொதுக்கூட்டம் நடைபெற்றது. அதில் சுமித்ரா மகாஜன் உள்ளிட்ட தலைவர்கள் கலந்து கொண்டனர். அப்போது பேசிய பிரதமர் மோடி கூறியதாவது:- இந்த நாட்டின் பிரதமராக என்னை உங்களுக்கு எல்லாம் மிக நன்றாக தெரியும். ஆனால், என்னை அறிவுறுத்தவும், கடிந்து கொள்ளவும் எங்கள் கட்சியில் உள்ள ஒரே நபர் யாராவது உண்டு என்றால் அது இவராகத்தான் இருக்கும். ஒரு சபாநாயகராக தனது பணியை திறமையாகவும், கட்டுப்பாட்டுடனும் நிறைவேற்றியதால் நாட்டு மக்களின் எண்ணங்களில் நீங்காத இடத்தை சுமித்ரா மகாஜன் பிடித்துள்ளார்.

பாஜகவில் நானும் அவரும் இணைந்து பலகாலம் பணியாற்றி இருக்கிறோம். பணியின்மீது அவர் காட்டும் அர்ப்பணிப்புணர்வு அலாதியானது. இந்தூர் நகரின் மேம்பாட்டுக்காக சுமித்ரா மகாஜன் முன்னெடுத்த அனைத்து பணிகளும் செய்து முடிக்கப்படும் என இங்குள்ள மக்களுக்கு நான் உறுதியளிக்கிறேன் என்றார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com