ஜி20 உச்சி மாநாடு: 3 நாள் பயணமாக தென்ஆப்பிரிக்கா புறப்பட்டார் பிரதமர் மோடி


ஜி20 உச்சி மாநாடு: 3 நாள் பயணமாக தென்ஆப்பிரிக்கா புறப்பட்டார் பிரதமர் மோடி
x
தினத்தந்தி 21 Nov 2025 7:41 AM IST (Updated: 21 Nov 2025 7:43 AM IST)
t-max-icont-min-icon

ஜி20 உச்சி மாநாட்டில் பங்கேற்க பிரதமர் மோடி, 3 நாள் பயணமாக இன்று (நவ.21) தென்ஆப்பிரிக்காவுக்கு புறப்பட்டு சென்றார்.

புதுடெல்லி,

ஜி20 நாட்டு தலைவர்களின் 20-வது உச்சி மாநாடு தென் ஆப்பிரிக்காவின் ஜோகன்னஸ்பர்க் நகரில் நாளை மற்றும் நாளை மறுநாள் நடக்கிறது. இந்நிலையில் இந்த உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி இன்று (வெள்ளிக்கிழமை) தென் ஆப்பிரிக்கா புறப்பட்டு சென்றார்.

உச்சி மாநாட்டின் 3 அமர்வுகளிலும் பிரதமர் மோடி பங்கேற்கிறார். அதில் காலநிலை மாற்றம், எரிசக்தி உள்ளிட்டவை குறித்து அவர் உரையாற்ற உள்ளார். குறிப்பாக ஜி20 நிகழ்ச்சி நிரலில் இந்தியாவின் கருத்துகளை பிரதமர் மோடி முன்வைப்பார் என வெளியுறவு அமைச்சகம் செய்திக்குறிப்பு ஒன்றில் தெரிவித்து உள்ளது. மேலும் இந்த மாநாட்டுக்கு இடையே பல்வேறு உலக தலைவர்களுடன் இருதரப்பு சந்திப்புகளையும் நடத்துகிறார்.

அத்துடன் இந்தியா-பிரேசில்-தென் ஆப்பிரிக்கா தலைவர்களின் கூட்டத்திலும் பிரதமர் மோடி பங்கேற்பார் என வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. முன்னதாக இந்த மாநாட்டை புறக்கணிப்பதாக அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் அறிவித்து இருந்தார். தென் ஆப்பிரிக்காவில் பழங்குடியினருக்கு எதிராக நடக்கும் அத்துமீறல்களை கண்டித்து இந்த முடிவை எடுத்திருப்பதாக அவர் அறிவித்தது குறிப்பிடத்தக்கது.


1 More update

Next Story