பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க ரஷியா புறப்பட்டார் பிரதமர் மோடி

பிரிக்ஸ்' கூட்டமைப்பின் 16-ஆவது உச்சி மாநாடு ரஷியாவின் கசான் நகரில் இன்று தொடங்குகிறது.இதையொட்டி, பிரதமா நரேந்திர மோடி ரஷியாவுக்கு 2 நாள் பயணமாக இன்று புறப்படுகிறா.
Published on

புதுடெல்லி,

பிரிக்ஸ் கூட்டமைப்பில் பிரேஸில், ரஷியா, இந்தியா, தென்னாப்பிரிக்கா, சீனா, ஈரான், சவூதி அரேபியா, எத்தியோப்பியா, எகிப்து, ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகள் அங்கம் வகிக்கின்றன.கூட்டமைப்பின் 16-ஆவது உச்சி மாநாடு ரஷியா தலைமையில் அந்நாட்டின் கலாசார மற்றும் கல்வி மையமாக திகழும் கசான் நகரத்தில் இன்றும் நாளையும் நடைபெறுகிறது.

இந்த உச்சி மாநாட்டின் கருப்பொருள், 'உலகளாவிய வளாச்சி மற்றும் பாதுகாப்புக்கான பலதரப்பு வாதத்தை வலுப்படுத்துதல்' ஆகும்.மாநாட்டில் பிரதமா மோடி, சீன அதிபா ஷி ஜின்பிங், ஈரான் நாட்டின் அதிபா மசூத் ரஜாவி உள்பட உறுப்பு நாடுகளின் தலைவாகள் பங்கேற்கின்றனா. சாவதேச அரசியல், பிரிக்ஸ் கூட்டமைப்பின் ஒத்துழைப்பு மற்றும் மேம்பாடு, பரஸ்பர பிரச்னைகள் குறித்து தலைவாகள் கலந்துரையாட உள்ளனா  இந்த நிலையில், டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் ரஷியாவுக்கு பிரதமர் மோடி இன்று காலை புறப்பட்டு சென்றார்.  

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com