குஜராத்: விமானப்படை சாகச நிகழ்ச்சிகளை கண்டு களித்த பிரதமர் மோடி

ஆயத்த ஆடைகள் உற்பத்தி தொழிற்சாலையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்
குஜராத்: விமானப்படை சாகச நிகழ்ச்சிகளை கண்டு களித்த பிரதமர் மோடி
Published on: 

காந்தி நகர்,

குஜராத்தில் நடைபெற்ற விமானப்படை சாகச நிகழ்ச்சிகளை பிரதமர் மோடி கண்டு களித்தார்.

பிரதமர் மோடி உத்தரபிரதேச மாநிலத்திற்கு இன்று பயணம் மேற்கொண்டுள்ளார். அதன்படி டெல்லியில் இருந்து விமானம் மூலம் உத்தரபிரதேசத்தின் வாரணாசிக்கு சென்றார். பிரதமர் மோடியை விமான நிலையத்திற்கே நேரில் சென்று உ.பி. கவர்னர், மாநில முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் வரவேற்றனர்.

பின்னர், வாரணாசியில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள ஆயத்த ஆடைகள் உற்பத்தி தொழிற்சாலையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்.

விமானப்படை சாகச நிகழ்ச்சிகள்

இதையடுத்து, விமானப்படை சார்பில் நடைபெற்ற சாகச நிகழ்ச்சிகளை பிரதமர் மோடி நேரில் கண்டு களித்தார்.

இந்த சாகச நிகழ்ச்சியில் விமானப்படைக்கு சொந்தமான சுகோய், தேஜஸ் உள்பட பல்வேறு விமானங்கள் பங்கேற்றன.

உத்தரபிரதேசத்தை நிறைவு செய்யும் பிரதமர் மோடி இன்றைய தினமே அங்கிருந்து உடனடியாக ஒடிசா மாநிலத்திற்கு செல்கிறார். தலைநகர் புவனேஷ்வர் செல்லும் பிரதமர் மோடி அங்கு ரிசர்வ் வங்கியின் டேட்டா சென்டர் மற்றும் சைபர் பாதுகாப்பு பயிற்சி மையத்தை திறந்து வைக்கிறார். மேலும், ஒடிசாவில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் பிரதமர் மோடி இன்றே டெல்லி புறப்பட்டு செல்கிறார்.

X

Follow us on Google
Daily Thanthi
www.dailythanthi.com