

வாரணாசி,
உத்தரப் பிரதேச மாநில காங்கிரஸ் கமிட்டித் தலைவர் அஜய் ராய் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அவர் விரைவில் குணமடைய வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், "உத்தரப் பிரதேச காங்கிரஸ் தலைவர் அஜய் ராய் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ளார் என்பதை அறிந்தேன். அவர் விரைவில் முழு உடல்நலம் பெற வேண்டும் என்று நான் விரும்புகிறேன்," என்று பகிர்ந்துள்ளார்.
வாரணாசி மக்களவைத் தொகுதியில் பிரதமர் மோடியை எதிர்த்து காங்கிரஸ் வேட்பாளராக அஜய் ராய் போட்டியிட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த 2014, 2019 மற்றும் 2024 ஆகிய மூன்று பொதுத் தேர்தல்களிலும் அவர் மோடியை எதிர்த்துப் போட்டியிட்டுத் தோல்வியடைந்தார்.