திருப்பதியில் இன்று நடைபெறும் தேசிய தொழிலாளர் உச்சிமாநாடு தொழிலாளர்களின் நலனை மேம்படுத்தும் வகையில் அமையும்: பிரதமர் மோடி

தேசிய தொழிலாளர் உச்சிமாநாட்டில் இன்று பிரதமர் மோடி மாலை 4:30 மணிக்கு காணொலிக் காட்சி வாயிலாக உரையாற்ற உள்ளார்.
திருப்பதியில் இன்று நடைபெறும் தேசிய தொழிலாளர் உச்சிமாநாடு தொழிலாளர்களின் நலனை மேம்படுத்தும் வகையில் அமையும்: பிரதமர் மோடி
Published on

புதுடெல்லி,

அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் தொழிலாளர் நலத்துறை மந்திரிகளின் தேசிய தொழிலாளர் உச்சிமாநாட்டில் இன்று பிரதமர் நரேந்திர மோடி மாலை 4:30 மணிக்கு காணொலிக் காட்சி வாயிலாக உரையாற்ற உள்ளார்.

ஆந்திர பிரதேசத்தின் திருப்பதியில் ஆகஸ்ட் 25,26 ஆகிய இரண்டு நாட்கள் நடைபெறும் இந்த உச்சிமாநாட்டை மத்திய தொழிலாளர் நலன் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம் நடத்துகிறது.

தொழிலாளர் சம்பந்தமான பல்வேறு குறிப்பிடத்தக்க விஷயங்களை விவாதிப்பதற்காக கூட்டு ஒத்துழைப்பின் உணர்வில் மாநாட்டிற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பணியாளர்களின் நலன் சார்ந்த திட்டங்களை திறம்பட அமல்படுத்துவதை உறுதி செய்யவும், மேம்பட்ட கொள்கைகளை தயாரிப்பதிலும் மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு இடையே மேலும் இணக்கத்தை உருவாக்க இந்த உச்சிமாநாடு உதவிகரமாக இருக்கும்.

திருப்பதியில் நடைபெறும் இந்த மாநாடு பல்வேறு தொழிலாளர் தொடர்பான பிரச்சனைகளில் ஒருங்கிணைக்கிறது.தொழிலாளர்களின் நலனை மேம்படுத்தும் வகையில் அமையும் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com