நவி மும்பையில் சர்வதேச விமான நிலையம்: பிரதமர் மோடி திறந்து வைக்கிறார்...!


நவி மும்பையில் சர்வதேச விமான நிலையம்: பிரதமர் மோடி திறந்து வைக்கிறார்...!
x

மராட்டிய மாநிலம் நவி மும்பையில் சர்வதேச விமான நிலையம் அமைக்கப்பட்டுள்ளது.

மும்பை,

மராட்டிய மாநிலம் நவி மும்பையில் சர்வதேச விமான நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த விமான நிலையத்தின் பங்குகளில் 74 சதவீதம் அதானி குழுமமும், 26 சதவீதம் மராட்டிய அரசும் வைத்துள்ளன. இந்த விமான நிலையம் செயல்பட கடந்த 30ம் தேதி மத்திய விமான போக்குவரத்து இயக்குனரகம் அனுமதி வழங்கியது.

இந்நிலையில், நவி மும்பை சர்வதேச விமான நிலையத்தை வரும் 8ம் தேதி பிரதமர் மோடி திறந்து வைக்கிறார். 8ம் தேதி மதியம் 2.40 மணிக்கு விமான நிலையத்தை பிரதமர் மோடி திறந்து வைக்கிறார். இதன் மூலம் மும்பை பெருநகரில் செயல்பாட்டிற்கு வரும் 2வது சர்வதேச விமான நிலையம் என்ற பெருமையை நவி மும்பை விமான நிலையம் பெறுகிறது.

இந்த விமான நிலையத்தில் ஆண்டுக்கு 90 மில்லியன் பயணிகளும், 3.2 மில்லியன் மெட்ரிக் டன் சரக்குகளும் கையாளப்பட உள்ளன. இது ஆசியாவில் விமான போக்குவரத்தின் முக்கிய மையப்புள்ளியாக திகழ உள்ளது.

1 More update

Next Story