

முசாபராபாத்
போராட்டம் நடத்திய பொதுமக்கள் மீது பாகிஸ்தான் ராணுவம் துப்பாக்கிசூடு நடத்தியது இதனால் இன்னொரு காசாவாக ஆக்கிரமிப்பு காஷ்மீர் மாறிவிட்டது என பொதுமக்கள் குற்றம் சாட்டி உள்ளனர்.
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரின் 53 தொகுதிகளில் 12 தொகுதிகள், இந்திய காஷ்மீரில் இருந்து குடியேறியவர்களுக்கு ஒதுக்கப்படுகிறது.இதற்கு ஆக்கிரமிப்பு காஷ்மீர் மக் கள் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். அங்கு கோதுமை மாவு உள் ளிட்ட அத்தி யாவ சிய பொருட்களின் விலையும், மின் கட்ட ணமும் கணிசமாக உயர்ந் துள்ளது.
இந்த பிரச்சினைகளை முன்னிறுத்தி ஆக்கிரமிப்பு காஷ்மீர் ப குதி மக்கள் கடந் த ஜூன் முதல் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த வியாழக்கிழமை ஆக்கிரமிப்பு காஷ்மீரின் ராவலாகோட் நகரில் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள் மீது ராணுவ வீரர்கள் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் 4 குழந்தைகள் உட்பட 18 பேர் உயிரிழந்தனர்.
35க்கும் மேற்பட் டோர் படுகாயம் அடைந்தனர். கடந்த ஜூன் முதல் இதுவரை 153 பேர் உயிரிழந்துள்ளனர். இது தொடர்பாக ஆக்கிரமிப்பு காஷ்மீர் மக்கள் மற்றும் ஒருங்கிணைந்த அவாமி செயல் குழுவின் மூத்த தலைவர்கள் கூறியதாவது:
இஸ்ரேல் ராணுவத்தின் தாக்குதலில் பாலஸ்தீனத்தின் காஸா பகுதி நரகமாக மாறியிருக்கிறது. தற்போது பாகிஸ்தான் ராணுவம், இஸ்ரேல் ராணுவ பாணியில் கொடூரதாக்குதல்களில் ஈடுபட்டு வருகிறது. இதன்காரணமாக ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதி காசாவாக மாறியுள்ளது.
இவ்வாறு அவர்கள் தெரிவித்துள்ளனர்.