காஷ்மீரில் பா.ஜ.க. பேரணியில் தலைகீழாக பறந்த மூவர்ண கொடி; போலீசார் எப்.ஐ.ஆர். பதிவு

காஷ்மீரில் பாரதீய ஜனதா கட்சி பேரணியின்பொழுது மூவர்ண கொடியை தலைகீழாக பறக்க விட்டதற்காக போலீசார் எப்.ஐ.ஆர். பதிவு செய்துள்ளனர்.
காஷ்மீரில் பா.ஜ.க. பேரணியில் தலைகீழாக பறந்த மூவர்ண கொடி; போலீசார் எப்.ஐ.ஆர். பதிவு
Published on

ஜம்மு,

ஜம்மு மற்றும் காஷ்மீரில் கத்துவா தொகுதி எம்.எல்.ஏ.வாக பாரதீய ஜனதா கட்சியின் ராஜீவ் ஜஸ்ரோடியா இருந்து வருகிறார். காஷ்மீரில் உள்ளாட்சி தேர்தல் வர உள்ள நிலையில் வார்டு எண் 19க்கான வேட்பு மனு தாக்கல் செய்வதற்காக முன்னாள் மந்திரியான ஜஸ்ரோடியா கத்துவா மாவட்டத்தின் சிவ்நகர் பகுதியில் தனது குடியிருப்பில் இருந்து பேரணியாக சென்றுள்ளார்.

இவருடன் அக்கட்சியின் வேட்பாளர் ராகுல் தேவ் வர்மாவும் உடன் சென்றுள்ளார். இந்த நிலையில், இந்த பேரணியில் மூவர்ண கொடி தலைகீழாக பிடித்தபடி கொண்டு செல்லப்பட்டு உள்ளது.

இதனை அடுத்து வினோத் நிஜாவான் என்பவர் கத்துவா காவல் நிலையத்தில் பிரிவு எண் 2ன் (தேசிய கொடியை அல்லது அரசியலமைப்பினை அவமதித்தல்) தேசிய கவுரவத்திற்கு அவமதிப்பு ஏற்படாமல் வகை செய்யும் தடுப்பு சட்டத்தின் கீழ் எப்.ஐ.ஆர். ஒன்று பதிவு செய்யப்பட்டு உள்ளது.

இந்த புகாருடன் வீடியோ ஒன்றையும் அவர் அளித்துள்ளார். அதில் பா.ஜ.க. சட்டமன்ற உறுப்பினரின் பின்னால் செல்லும் நபரொருவர் கையில் தலைகீழாக மூவர்ண கொடியை பிடித்தபடி செல்கிறார். இந்த பேரணி 2 கி.மீ. வரை செல்கிறது.

இது மிக கீழ்த்தர மற்றும் இந்திய நாட்டுப்பற்று மிக்க குடிமக்களின் உணர்வுகளை புண்படுத்தும் செயல் என்று நிஜாவன் தனது புகாரில் தெரிவித்துள்ளார். இந்த விவகாரம் பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com